Sunday, June 29, 2014

மரகதலிங்கம்!

படைப்பாக்கம் : ஆதி வெங்கட்

மீபத்தில் வந்த எங்களின் 12வது திருமணநாளுக்கு என்னவரிடம் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் சில புத்தகங்களை வாங்கித் தர சொன்னேன். அவரும் உடனேயே ஆன்லைன் புக்கிங் மூலம் புத்தகங்களை தருவித்து பரிசளித்தார். அதில் ஒன்று தான் இந்த மரகதலிங்கம்.

து ஒரு ஆன்மீக மர்ம நாவல். ”என்னுரையில்” திரு இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் தனக்கு மிக மிக திருப்தி தந்த நாவல் என்று குறிப்பிடுகிறார். மேலும் ”ஆன்மீகம் சார்ந்த இறை நம்பிக்கை நமக்குள் பலகேள்விகளை உடையது. எனக்குத் தெரிந்து  தெளிவான ஆன்மீக எண்ணம் உடையவர்கள் மிகமிகமிகக் குறைவு. குழப்பமான கேள்விகளோடு, அரைகுறை நம்பிக்கையோடு தான் நமது ஆன்மீகம் உள்ளது. சான்றோர் உலகமும் தெளிவாய், பொட்டில் அடித்த மாதிரி பதில் கூறியதில்லை. பல ஆன்மீக விளக்கங்கள் பாதிபுரியும், பாதிபுரியாது. இதுதான் இன்றைய ஆன்மீக நிலை. நான் என் நாவல்களில் இந்த நிலையை மாற்ற முயல்பவன்” என்கிறார்.


”லிங்கங்களில் இருவிதம் உண்டு. ஒன்று சுயம்பு, இன்னொன்று மானுடர்கள், தேவர்கள் உருவாக்கியவை. சுயம்பு என்றால் தானாக தோன்றியவை. மற்றவை உருவாக்கப்பட்டவை. இதில் மரகதலிங்கம் நவரத்ன லிங்கங்களின் தொகுப்பில் வருவது. இதை வழிபட்டால் தீராத நோயும் தீரும்.”

சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது அதன்மேல் சூரியஒளிபடும்போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்று அந்த மரகதலிங்கம்……?

இப்படித்தான் இந்த கதை துவங்குகிறது. ஒருகாலத்தில் பசுமையாக இருந்த சிவன்குடி கிராமம், இன்று வறட்சியுடன் மொத்தமே பத்து மனிதர்களுடன் சுடுகாடாக காணப்படுகிறது. அந்த ஊருக்கு பாண்டியராஜன் என்பவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான். கோயிலுக்கு சென்று புதர் மண்டிக் கிடக்கும் அவலநிலையைக் காண்கிறான். குருக்களை கண்டு தன் தந்தையின் விருப்பமாக இடிபடும் நிலையில் உள்ள சிவன் கோயிலை புனரமைக்கும் எண்ணத்தை வெளியிடுகிறான். ஆனால் குருக்களோ இப்படி வந்தவர்கள் எவரும் உயிரோடு ஊர் திரும்பியதில்லை, என்று லிங்கம் களவு போனதோ, அதோடு ஊரும் சுடுகாடாகி போய்விட்டது. கடவுளின் கோபம் குறையவில்லை. அதனால் உடனேயே இங்கிருந்து கிளம்பி விடு என்கிறார். ஆனால்… பாண்டியராஜனோ பிடிவாதம் பிடிக்க, அவனை ஒரு கருநாகம் தீண்டி விடுகிறது…….

பல வருடங்களுக்கு முன்னால் கஜேந்திர பாண்டியன் என்பவனும், கோட்டை முத்துவும் சிவன்குடி மரகதலிங்கத்தின் மேல் கண் வைத்து பத்து கோடிக்கு வெளிநாட்டில் விற்க ஏற்பாடு செய்து களவாடி விடுகின்றனர். இதற்கிடையே இவர்கள் இருவருக்கும் பண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு, லிங்கம் பாம்பு புற்றில் தஞ்சமடைகிறது. திருடிய கஜேந்திர பாண்டியன் கருநாகம் தீண்டி லிங்கம் புற்றில் இருக்கும் உண்மையை கோட்டைமுத்துவிடம் சொல்லாமலே இறந்து விடுகிறான். திருடச் சொன்ன கோட்டை முத்துவுக்கு தொழுநோய் வந்து அது அவனது மகனுக்கும் தொடர்கிறது.

மரகதலிங்கம் புற்றில் இருந்து மீண்டதா? பாண்டியராஜன் கோவிலை சீரமைத்தானா? சிவன்குடி சுடுகாடாகி போனதற்கு கடவுளின் கோபம் தான் காரணமா? அல்லது மனிதர்களின் சதி வேலையாக இருக்குமா? போன்ற உங்கள் எல்லாம் கேள்விகளுக்குமான விடை மரகதலிங்கம் புத்தகத்தில்…

இந்த புத்தகத்திலேயே ”உச்சியிலே” என்ற மர்ம நாவலும், ஓசைப்படாமல் ஒரு கொலை என்று ஒரு குறுநாவலும் இருக்கிறது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த புத்தகத்தை எடுத்தால் முடிக்கும் வரை கீழே வைக்க தோன்றவில்லை.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

திருமகள் நிலையம், சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,பழைய எண்: 28 புது எண்: 13, சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை – 600017. தொலைபேசி: 24342899, 24327696.
நான்காம் பதிப்பான டிசம்பர் 2011 படி இதன் விலை – ரூ 70.
மொத்த பக்கங்கள் - 152.

6 comments:

  1. திகில் இருக்கிறது.
    நடு நடுவே ஒரு
    முகில் வருதா ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஆமாப்பா ...ஆமா ...எல்லாமே வருது ... இந்த சுப்பு தாத்தா வேற திகில், முகில்னு சொல்லி காலங்காத்தாலே பேதிய.. சாரி பீதிய கிளப்பிறாரேய்யா ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

      Delete
  2. என்னுடைய பகிர்வை இங்கு வெளியிட்ட கணேஷ் சாருக்கும், வாசகர் கூட குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமையான விமர்சனப்பகிர்விற்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. விமர்சனம் வெளியிட்டமைக்கு நன்றி கணேஷ்... :)))

    ReplyDelete
  5. "மரகதலிங்கம்" பெயர் சிவகடாட்ஷமாக அற்புதமாக இருக்கிறது ... ஆனா இது ஆன்மீக மர்ம நாவலா? அம்மாடி !.. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!