Wednesday, February 12, 2014

கர்ணனின் கவசம்!

புத்தகக் கண்காட்சி துவங்குவதற்கு முன்பாக என் நண்பர் ஒருவர், ‘கர்ணனின் கவசம்னு புதுசா ஒரு புத்தகம் வந்திருக்கு. படியுங்க. முதல் பக்கத்துல ஆரம்பிச்சா முடிக்கிற வரைக்கும் கீழ வெக்க விடாது’’ என்று சிபாரிசித்தார். அவர் சொன்னது சரிதான்! நாவலைத் தொடர்ந்து படிக்க வைக்கும் சுவாரசியமான எழுத்து நடை. கதைக்களமும் மிகப் புதுமையானதுதான். ஆனால்... கதையின் சுருக்கத்தை முதலில் பார்க்கலாம்...!

சூரியனுக்குள் ஊடுருவும் கனிமம் ஒன்று இந்தியாவில் கிடைக்கிறது என்பதை அறிந்து அதைக் குறிவைத்து ஜெர்மனியிலிருந்து மதுரை மீனாட்சி கோயிலிலிருந்து தன் தேடலைத் துவங்க வருகிறான் ஃபாஸ்ட் என்பவன். அதே சமயம் சீனாவிலிருந்து சூயென் என்பவனும் இதே நோக்கத்துடன் கிளம்பி வருகிறான். அந்த ரகசியத்தைக் கைப்பற்ற இருவருக்கும் உதவ இங்கே நபர்கள் தயாராக இருக்க... அதைக் காப்பாற்ற வேறு சில சக்திகள் செயல்படுகின்றன. அதாவது... தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் ஒரு பெரும் போராட்டம் துவங்குகிறது. கர்ணனின் கவசமாக உருவகப்படுத்தப்படும் அந்த ரகசியத்தை அடைய தீய சக்திகள் முயல, அதைக் காப்பாற்ற குந்திதேவி, திரௌபதி, அம்பை உள்ளிட்ட மகாபாரத பெண் மாந்தர்கள் வேறு சில புராண, நவீன கதாபாத்திரங்களின் சக்தியுடன் போராட... விஞ்ஞானமும், புராணமும், காமிக்ஸும் கலந்த கலவையாக நாவல் விரிகிறது. இறுதியில் தீய சக்திகள் அழிந்ததா என்ற கேள்விக்கு விடை தராமல் (பூடகமாக நாம் யூகிச்சுக்கணும் போல) பிறிதொரு காலகட்டத்தில் (முதல் அத்தியாயத்தில் வரும்) இதே சம்பவங்கள் வேறு வேறு நபர்களால் நிகழத் துவங்குகின்றன என்று கதையை முடிக்கிறார் கதாசிரியர். (இது சிறுகதைக்கு வேணா சரியான உத்தியா இருக்கலாம். நாவலுக்கு சகிக்கலை)

ன்னங்க... ஒண்ணுமே புரியாம தலையப் பிச்சுக்கணும் போல இருக்கா...? சில வரிகள்லயே உங்களுக்கு இப்படித் தோணிச்சுன்னா முழுக் கதையையும் படிச்ச எனக்கு எப்படி...? மகாபாரதக் கதாபாத்திரங்களான, கர்ணன், குந்தி, சகுனி, துரியோதனன், அம்பை, பீஷ்மர், சால்வன், ஸ்ரீகிருஷ்ணன், அதை எழுதின வேதவியாசர், ராமாயணக் கதாபாத்திரமான ஜடாயு, இந்திரன், ஒன்பது கிரகங்கள், சரித்திர கால பாத்திரங்களான குந்தவை, ஆதித்த கரிகாலன், ரவிதாஸன், சாம்ராட் அசோகர், காமிக்ஸ் கேரக்டர்களான மணல் மனிதன், கிராஃபீன் மனிதன், எரிகல் மனிதன் போன்ற கதாபாத்திரங்கள் அப்படி இப்படின்னு ஒவ்வொரு சாப்டர்லயும் ஏராளமான கதாபாத்திரங்கள். கற்பனைக்கு எல்லையே இல்லை என்பது நிஜமதான். அதை இப்படி கட்டுத்தறியின்றி ஓடவிட்டதில் நூலாசிரியருக்கு ஒரு ப்ளஸ், ஒரு மைனஸ் - இத்தனை கேரக்டர்களையும் நினைவில் வெச்சுக்க பிரயத்தனப்பட்டுட்டே வாசகன் படிக்கறதால கதையில குறை கண்டுபிடிக்க முடியாமப் போயிடறது ப்ளஸ்! படிச்சு முடிச்சதும் அதே காரணத்தால எரிச்சல் வர்றது மைனஸ்!

இந்தியாவின் கனிம வளங்களை கர்ணனின் கவசமாக உருவகப்படுத்தி, அதைக கைப்பற்றப் போராடற தீய சக்திகளையும், நல்ல சக்திகளையும் புராண, சரித்திர கதாபாத்திரங்களோட உருவகப்படுத்திச் சொன்னது உண்மையில் நல்ல அம்சம். அது எனக்குப் பிடிச்சிருக்கு. புராண விஷயங்களைச் சொன்ன நூலாசிரியர் அங்கங்கே சயின்ஸைத் தொட்டுச் செல்றது அழகான அம்சம். மதுரை மீனாட்சி கோயில், தில்லை நடராஜர் உட்பட ஒவ்வொண்ணுக்கும் ஒரு பேக்-அப் இருக்குன்னு சொன்னதோட, ஒரு கட்டத்துல ஜெர்மானியனும், சீனனும்கூட பேக்கப்தான்னு சொல்லி, தாராவும் ஆதித்தனும் ஐக்கியமாகிற நடராஜர் சிலையும் பேக்னஅப்தான்னு சொன்னதுல தலைசுத்திப் போயி... நாவலைப் படிச்சுட்டிருக்கறது நான்தானா, இல்லை என்னோட பேக்கப்பான்னுட்டு ஒரு ஸ்ட்ராங்கான சந்தேகமே வந்துட்டது எனக்கு.

முதல் அத்தியாயத்துல ‘‘சூரியனுக்கு நிறைய மகன்கள். ஆஞ்சநேயர்கூட சூரியனோட மகன்தான். அப்படியிருக்கறப்ப கர்ணனுக்கு மட்டும் ஏன் கவசத்தைக் கொடுத்தார் சூரியன்?’’ அப்படின்னு ஒரு டைலாக் எழுதி தலைசுத்த வெச்சார். வாயுவோட புத்திரன் அனுமார்னுதானே கேள்விபட்டிருக்கோம்.... சூரியனோட புத்திரன்னு நூலாசிரியர் தப்பா எழுதிட்டார் போலருக்குன்னு நெனச்சுட்டு, அதை பொருட்படுத்தாம நாவலைப் படிச்சேன். இதை வேற யாரோ தொடரா வந்தப்ப சுட்டிக் காட்டியிருப்பாங்க போலருக்கு... கடைசி அத்தியாயத்துல முதல் அத்தியாயத்துல நடந்த அதே சம்பவங்கள் ரிபீட் ஆகுதுன்னு வர்றப்ப, ‘‘சூரியனோட பையன் ஒண்ணும் அனுமார் இல்ல..." என்று சிறுவன் நக்கலடிக்க, ‘‘அது எங்களுக்குத் தெரியாதா? அனுமார் சூரியனோட வளர்ப்பு மகன். குரு. அதனால அப்படியும சொல்லலாம்..."ன்னு ஒரு சமாளிபிகேஷன் டயலாக் எழுதியிருக்காரு நூலாசிரியர். அட... அட... அட...! இப்படியே சொல்லிட்டே போனா, இந்திரனோட வளர்ப்பு மகன் தர்மன், எமனோட வளர்ப்பு மகன் பீமன், பிரம்மனோட வளர்ப்பு மகன் ராமன்னு எப்படில்லாம் சொல்லிட்டே போலாம்...! சூப்பருங்கோ!

தன்னுடைய நாவலில் இரு கதாபாத்திரங்கள் பேசுவது போல, ‘‘இது மித், ஹிஸ்டரி, சயின்ஸ் கலந்த அமானுஷ்யம்" என்று தன் கதையைத் தானே வர்ணிக்கிறார் கதாசிரியர். உண்மைதான்...! மித் (சாம்பார்), ஹிஸ்டரி (பாயாசம்), சயின்ஸ் (பொரியல்), அமானுஷ்யம் (ஐஸ்க்ரீம்) இப்படி எல்லாத்தையும ஒரே சட்டில போட்டுக் கலக்கின சூப்பரான உணவுங்க! சாப்பிடறதால (ஐமீன்... படிக்கறதால....) ஏற்படற உபாதைகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல...!

நூலின் பெயர் : கர்ணனின் கவசம், நூலாசிரியர் பெயர் : கே.என்.சிவராமன், 248 பக்கங்கள், விலை: ரூ.200, வெளியிட்டோர்: சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004, email: kalbooks@dinakaran.com




ஆசிரியர் குறிப்பு : கே.என்.சிவராமன் & சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருச்சி. பிறந்து, வளர்ந்ததெல்லாம் வேலூரில். டூல்ஸ் எஞ்சினியரிங் முடித்துவிட்டு பத்திரிகைத் துறைக்கு வந்த இவர், ‘பிலிமாலயா’, ‘பெண்மணி’, ‘சாவி’, ‘குங்குமம்’, ‘குமுதம்’, ‘தினமலர்’ இதழ்களில் பணிபுரிந்து விட்டு இப்போது ‘தினகரன்’ நாளிதழின் இணைப்பிதழ்களுக்கு ஆசிரியராக இருக்கிறார். அச்சில் வரும் இவரது முதல் நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


‘‘வாசகர் கூடத்திற்கு நாங்களும் பங்களிப்பு செய்யலாமா?’’ என்று சமீப காலமாய் சந்தித்த பலர் எங்களிடம் விசாரித்தார்கள். வாசகர்களாகிய நாமனைவரும் கூடும் இடம் என்பதால்தானே இது ‘வாசகர் கூடம்’. ஆகவே... நீங்கள் ரசித்துப் படித்த புத்தகம் பற்றியும், எழுத்தாளரைப் பற்றியும் எழுதி vasagarkoodam@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்களின் படைப்பும் வாசகர்கூடத்தை படைத்தவரின் பெயருடன் அலங்கரிக்கும். கரம் கோர்க்க வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

23 comments:

  1. நாவலே சமாளிபிகேஷனாக இருக்கும் போல...! உபாதைகளுக்கு தயாராயில்லை...! நன்றி...

    ReplyDelete
  2. புத்தகக் காதலர்கள் தவிர "நாங்களும் கலந்து கொள்ள முடியமா...?" என்று சென்ற வாரம் தான் இரு பதிவர்கள் கைபேசினார்கள்... அதற்கு பதில் கிடைத்து விட்டது... நன்றி... அவர்களிடம் தெரிவிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பங்களிக்கச் சொல்லுங்கள். எங்கள் மேல் அக்கறை கொண்ட உங்களுக்கு மகிழ்வுடன் எங்களின் நன்றி!

      Delete
  3. என்ன ஆனாலும் படித்தே தீருவதென்று முடிவு செய்துவிட்டேன்.. காரணம் நீங்கள் கூறிய அந்த சுவாரசிய எழுத்து நடை தான்.. ஆனா நான் அப்பப்போ படிக்கிற ஆளு, கன்டின்யுடி இல்லாம போயிருமோன்னு பயபடுறேன் பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படிச்சாலே கன்டின்யூட்டி குழப்பம் வரும். அப்பப்ப படிச்சா... சுத்தம்! எப்ப வேணாலும் வந்து வாங்கிக்கப்பா என்கிட்டேர்ந்து புத்தகத்தை!

      Delete
  4. //வாயுவோட புத்திரன் சூரியன்னுதானே கேள்விபட்டிருக்கோம்...//.

    புத்தகத்தை வாசித்து நீங்களும் நல்லாவே குழம்பிப் போயிருக்கீங்க என்று தெரிகிறது கணேஷ். ஆனாலும் மனந்தளராமல் முயற்சியில் வெற்றி பெற்று புத்தகத்தை வாசித்து முடித்து அதற்கான விமர்சனத்தையும் முன்வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அடாடா... அந்த இடத்துல அனுமார்ன்னு வந்திருக்கணும் நியாயமா. நீங்க சொன்ன மாதிரி அநியாயத்துக்குக் குழம்பிப் போய் உங்கட்ட பல்பு வாங்கிட்டேன் கீதா. (இப்ப திருத்திட்டேன்).தவறைத் திருத்திய, பகிர்வை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  5. கைக்குக் கிடைச்சா பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. கைக்குக் கிடைச்சா பாக்கலாம்னு சொலற இந்த மதுரைக்காரரோட ஒரே மனதைரியத்தைப் பாராட்டி கம்பெனி உங்களுக்கு தர்ற அதிசயப் பொருள் இந்த புத்தகம் ஸார்!

      Delete
  6. Replies
    1. அதுக்காகத்தானே இந்தப் பகிர்வே யங்கர் சிஸ்டர்!

      Delete
  7. ரெண்டு நல்ல வார்த்தையா சொல்லுங்கப்பா! எவ்வளவு கஷ்டப்பட்டு நாங்க எழுதறோம்! 'கண்டினுயிட்டி' அது, இதுன்னு உயிரை வாங்கலாமா? வயசான காலத்துலே பொதுவாப் பல விஷயங்கள்லே கண்டினுயிட்டி போயிடுமல்லவா, அதுல வாசிப்பும் ஒண்ணுதானே! எழுத்தாளனப் போட்டு வதைக்காதீங்கப்பா!

    ReplyDelete
    Replies
    1. அஞ்சேல்! இந்தத் தளத்துல உங்க புத்தகத்தோட விமர்சனம் நிச்சயம் வெளியிடப்பட மாட்டாது. ஹி.. ஹி...! மிக்க நன்றிங்கோ!

      Delete
  8. நல்லதொரு விமர்சனம்! இத்தனை குறைகள் சொன்னாலும் படிக்கத்தூண்ட செய்கிறது உங்களின் விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை ரசித்த சுரேஷுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  9. அண்ணா எங்கள பாத்தா பாவமா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. பாவமா இருந்ததால தாம்மா நீங்களாசசும் படிக்காம தப்பிச்சுக்கட்டும்னு இந்த விமர்சனத்தையே எழுதினேன். ஹி... ஹி... மிக்க நன்றி!

      Delete
  10. வாசகர்கூடத்திற்கு வந்தால் நல்ல புத்தகங்களை அடையாளம் காண்பிப்பதுடன், இந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டாம் என்றும் தெரிந்துகொள்ள முடிகிறது.
    வாசகர்கூடத்தை ஆரம்பித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நானும் எழுதலாமா என்று சீனுவின் பதிவில் (ராஜீவ்காந்தி சாலை புத்தக விமரிசன பதிவு) கேட்டிருந்ததற்கு இங்கு பதில் கிடைத்திருக்கிறது.

    எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete
  11. நல்ல விமர்சனம்......

    சந்திப்பின் போது பேசிய புத்தகம் இதுதானா..... :)

    ReplyDelete
  12. அடடா! இப்பொழுது தான் "ராஜிவ்காந்தி சாலையின்" விமர்சனத்தை படித்தேன். இதுவும் அதே மாதிரி தானா?.

    "// ஏற்படற உபாதைகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல...!//' - இப்படி சொன்னபிறகு, நாங்க அந்த புத்தகத்தை படிப்போமா.

    ReplyDelete
  13. பேரை பாத்து ஏமாந்துட்டன்...... கர்ணன் மேல் இன்னமும் கழிவிரக்கம் கூடுது

    ReplyDelete
  14. விமர்சனமே கிரைம் சினிமா பாணியில் இருக்கிறது ... நன்றி ! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!