Thursday, February 27, 2014
பொதுவாக திறமை இருப்பவர்கள் பொது வெளியில் அதிகம் பேச மாட்டார்கள், அப்படி பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நழுவுகின்ற திறமைசாலிகளுக்கு மத்தியில், நேர் எதிர் குணம் கொண்டவர் தான் இந்நூலின் ஆசிரியர் திரு. தங்கர் பச்சான். அதிகம் பேச மாட்டார், மீறி பேசினால் "அதிகம் பேசப்படுவார்!"
பன்முகம் கொண்ட திறமைசாலி, திரைத்துறையில் இவரைப்பற்றிய பிம்பங்கள் எப்படி இருந்தாலும், தமிழ் எழுத்துலகில் இவருக்கென தனி இடம் இருக்கிறது! உணர்வுகளை மையப் படுத்தியே படைப்புகளை உருவாக்குவார்!
கற்பனைக் கலவைகளை தவிர்த்து, வாழ்வியலை பதிவு செய்வதில் பெரும் ஆர்வம் மிகுந்தவர். வாசித்து முடிக்கையில் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும் இவரின் எழுத்துக்கள்! அதற்கு சான்று இந்த குடி முந்திரி எனும் சிறுகதை தொகுப்பு.
1) குடி முந்திரி
2) பெரு வழியில்
ஒரு கூத்து மேடை
3) வளர்க தமிழ்!
4) பசு
5) வக்கிரம்
6) சக மானுடங்களும்,
தரச் சான்றிதழ்
கிட்டாத அறவாழி
என்கிற ஒரு
தமிழ் எழுத்தாளனும்!
முதல் கதையான "குடி முந்திரியில்" படிப்பறிவு இல்லா தன் வம்சத்தில் தன் மகன் வாங்கப் போகும் பட்டத்திற்காக/ மகனின் ஆசைக்காக, குல சொத்தான குடி முந்திரியை விற்பதை எத்தனை நுணுக்கமுடன் பதிவு செய்திருக்கிறார் என்பதை அந்த சூழலில் வளர்ந்தவன் என்கிற முறையில் நன்கு உணர முடிந்தது, படித்துப் பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள்!
அடுத்து "பசு" எனும் தலைப்பில், மனித உணர்வுகளை, எண்ணங்களை மிக அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார்! ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்த ஒருவனின் தவிப்பை, மன ஓட்டங்களை மிக துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கும் இந்த தொகுப்பில் உள்ள அனைத்தும், நினைவில் பதியும் தன்மை கொண்ட அழகிய படைப்புகள்! ஒரு பானைக்கு இந்த இரண்டு பருக்கைகளே போதுமென்று நம்புகிறேன்! வாய்ப்பு கிட்டும்போது வாங்கி வாசித்துப் பாருங்கள், கொடுக்கும் காசுக்கு மனம் நிறைவடையலாம்!
வெளியீடு :
செம்புலம்
50, 5வது தெரு, அச்சுதன் நகர்,
ஈக்காட்டுதாங்கல், சென்னை - 97.
மின் அஞ்சல் : sempulam @ yahoo.com
வெளிவந்த ஆண்டு : 2003, விலை : 75
Subscribe to:
Post Comments (Atom)
திரு. தங்கர் பச்சான் அவர்களின் பேட்டியை கேட்டுள்ளேன்... பேச்சு பொட்டில் அறைந்தாற் போல் சட்டென இருப்பதைப் போல நீங்களும் சுருக்கமாக முடித்து விட்டீர்களே...!
ReplyDeleteநூல் அறிமுகத்திற்கு நன்றி...
நச்சென்ற விமர்சனம், தங்கர்பச்சான் அவர்கள் எழுத்தாளர் என்பதும், 2003 லேயே வெளிவந்த நூல் இது என்பதும் இப்போதுதான் அறிகிறேன்...
ReplyDeleteதங்கரின் சிறுகதைகள் தொண்ணூறுகளில் நிறைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவரின் 'பஸ்' என்ற சிறுகதை, பத்திரக்கோட்டையைச் சுற்றிய நிகழ்வுகளின் சாரம். நல்ல எழுத்தாளர்தான் தங்கர்.
ReplyDeleteநன்றி வெளங்காதவன்... :-)
Deleteதங்கர் பச்சான் அவர்களின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது எழுத்தை இது வரை வாசித்ததில்லை.
ReplyDeleteநல்லதொரு விமர்சனம். வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியது.
இப்போதுதான் தெரியும் தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளர் என்பது. முன்னாடியே பதிவு வந்து இருந்தால், புத்தக கண்காட்சியில் வாங்கி இருக்கலாம்...
ReplyDeleteபகிர்விற்கு நன்றி!
இரு கதைகள் பற்றி மட்டும் விமர்சனங்கள் தந்து, கதைகள் அனைத்தையும் படிக்க ஆவலை கொண்டு வந்து விட்டீர்கள் அரசன்.
ReplyDeleteகுடி முந்திரி, ஒன்பது ரூபாய் நோட்டு என்று இரண்டு புத்தகங்கள் தங்கர்பச்சான் எழுதியவை, நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். (ஒன்பது ரூபாய் நோட்டை அவரே படமா எடுத்துட்டார்.) இருந்தாலும் ஏனோ அவரின் புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கிப் படிக்கணும்னு தோணலை. இப்ப இந்த விமர்சனம் படிச்சதும், வாங்கியயாவது அல்லது அரசன்ட்டருந்து சுட்டாவது உடனே படிச்சுரணும்னு தோணுது. ஹா... ஹா... ஹா...!
ReplyDeleteதங்கர்பச்சான் எழுத்துக்கள் குறித்து கேள்விப்பட்டதுண்டு இதுவரை வாசித்ததில்லை. இந்த புத்தக கண்காட்சிக்கும் கூட அவருடைய ஒரு புத்த்கம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. உங்களது விமர்சனத்தைப் பார்த்த பின்பு வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது...
ReplyDeleteநல்ல விமர்சனம்.....
ReplyDeleteஇதுவரை இவரது புத்தகம் படித்ததில்லை.
குடி முந்திரி ... வித்தியாசமான தலைப்பு ... தங்கர்பச்சான் எழுத்துக்கள் இதுவரை வாசித்ததில்லை. ... வாசிக்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete