Showing posts with label தியாகராஜ பாகவதர். Show all posts
Showing posts with label தியாகராஜ பாகவதர். Show all posts

Wednesday, July 16, 2014

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்

1944ஆம் ஆண்டு அக்டோபர் பதினாறாம் தேதி - தீபாவளித் திருநாள் - அன்று வெளியான ஹரிதாஸ் திரைப்படம் தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது எண்பது வருட தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இது தான். மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன் அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜா பாகவதர்தான் அந்த சாதனையின் நாயகன்.