Sunday, April 5, 2015
சுஜாதாவின் கதைகளை படித்து வாசிப்பு பழக்கத்தை துவங்கிய எனக்கு கி.ரா. அவர்களின் 'கோபல்லகிராமம்' தான் ஊர் வழக்கில் நான் வாசித்த முதல் புத்தகம். படிப்பதற்கு சற்றே சிரமப்பட்ட போதும் எழுத்தின் சுவை உணர்ந்த போது எல்லாம் எளிமையானது. இளம் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி அவர்களின் வற்றாநதி சிறுகதை தொகுப்பினை வாசிக்க ஆரம்பித்த போதும் கிட்டத்தட்ட அதே போன்ற உணர்வு. அந்த தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்து முடிக்க சில மாதங்கள் தேவைப்பட்டது. எனக்கு பிடித்த சில கதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
'வற்றாநதியில்' நான் மிகவும் ரசித்து படித்த ஒரு கதை... அது கதை அல்ல கடிதம். 'வணக்கத்திற்குரிய ' என்ற பெயரில் ஒருவர் பி.டி. வாத்தியாரான தன் வருங்கால மாமனாருக்கு எழுதும் கடிதம். அம்மா, அப்பா, தம்பி தங்கை, காதலி, மனைவிக்கு எழுதிய கடிதங்களை கூட கேள்விப் பட்டிருக்கிறேன். இது கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் இருந்தது, இதில் ஒரு இடத்தில் 'சுவாதியிடம் நீங்கள் கொடுத்தனுப்ப வேண்டியதெல்லாம் அன்பையும், இந்த தலைமுறை இழந்துவிட்ட பாசத்தையும் தான்' என்று சொல்லி இன்றைய தலைமுறையினருக்கு ஆசிரியர் ஒரு குட்டும் வைக்கிறார்.
விடலைப் பருவ காதலை சொல்லும் 'பச்ச', மனதை கனக்க வைக்கும் 'அப்பாவும் தென்னை மரங்களும்' , மனம் கரைய வைக்கும் 'பிரிவோம் சந்திப்போம்' என ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு அனுபவச் சிதறல்களாய் நம்முன் கொட்டிக் கிடக்கிறது. ஆசிரியரின் எழுத்தை வாசிக்கையில் நெல்லையில் எங்கோ ஓரிடத்தில் சுற்றி அலைந்து கொண்டிருப்பதாய் ஓர் உணர்வு மேலிடுகிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும், தொய்வின்றி கதை சொல்லும் பாங்கும், இயல்பாய் அந்தக் கதைக்கு ஒரு முடிவு அமைப்பதும் கார்த்திக் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தை விரைவில் பிடிப்பார் என்பதையே சொல்கிறது.
'சிவந்திப்பட்டி கொலை வழக்கு' ஒரு குறும்படத்திற்கான கதை போன்று நேர்த்தியாக இருக்கிறது, 'லைட்ஸ் ஆப்' மனதை நெருடிச் செல்லும் எதார்த்த கதை. 'நிலைக்கதவு' சிறுகதை நிச்சயம் நம்மில் பலருக்கும் தன் வாழ்க்கையில் கூட இது போன்று நடந்திருக்கக் கூடும். பால்ய கால 'சைட்' பற்றி சொல்லும் 'ஜெனி', திகிலோடு முடியும் 'டெசி கதை' என படிப்பவர்களுக்கு சுவையான படையலை படைத்திருக்கிறார் ஆசிரியர்.
நூலின் பெயர் : வற்றா நதி
ஆசிரியர் : கார்த்திக் புகழேந்தி
பக்கங்கள் : 128
விலை : ரூ. 120
பதிப்பாளர் : அகநாழிகை பதிப்பகம்,
#390, அண்ணா சாலை,
KTS காம்ப்ளெக்ஸ்,
KTS காம்ப்ளெக்ஸ்,
சைதாபேட்டை ,
சென்னை - 600 015
தொலைபேசி - 999 454 1010
Thursday, March 26, 2015
Posted by
arasan
at
1:24 AM
Labels:
Novel,
கிராமிய எழுத்துக்கள்,
சமுதாயம்,
சிறு கதைகள்,
புகழ்
2
comments
எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் வாங்கிய சில புத்தகங்கள் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன அப்படி ஒன்று தான் இந்த மாங்கொட்ட சாமி. வழக்கம்போல் ஒரு ஞாயிறின் அந்தியில் டிஸ்கவரி புக் பேலசின் புத்தக வரிசைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் சிக்கியது இந்நூல். உண்மையில் இந்த மாதிரி புத்தகத்தைத் தான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன், முதல் பக்க எழுத்து நடை அப்படியே மனசில் ஒட்டிக்கொள்ள வாங்கி வந்த கையோட படித்தும் முடித்தாயிற்று.
மொத்தம் பதிமூன்று கதைகளைக் கொண்ட இந்நூல் பழைய பாக்கெட் நாவல் சைசில் இருக்கிறது. எவ்வித அலங்காரமும், புனைவுமற்ற எழுத்து நடை. ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கையில் அருகில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கதையாக சொன்ன உணர்வை தருகிறது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் மனிதர்களோடு சில காலம் பழகிய மன நிறைவை தருகின்றன இக்கதைகள். வாழ்ந்து சலித்த கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை எந்த சலிப்புமில்லாமல் சொல்லுவதில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும் இந்நூலின் ஆசிரியர் திரு. புகழ்.
கிராமங்களில் முன்னோர்கள் சொல்லும் செவி வழி கதைகளை கூர்ந்து கவனித்தால் அதிலொரு நேர்த்தி இருக்காது. அங்குமிங்கும் அலைபாயும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். கதை சொல்லிகள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி கதை மாந்தர்களை உருவகப்படுத்தி உயர்த்திச் சொல்வர். புகழின் கதைகளைனைத்தையும் செவி வழி கதைகளின் அச்சுப் பதிவாக காண்கிறேன். இதிலொரு நேர்த்தி இருக்கிறது. இவரின் கதை மாந்தர்கள் அவ்வளவு வலுவாக புனையப்பட்டிருக்கின்றனர். இக்கதைகளைனைத்தையும் புனைவு என்று எளிதில் கடந்து விட முடியாது, உதாரணமாக, "செங்காட்டு ஜோசியன்", "தொங்கட்டான் கெழவி" என்ற இரண்டு கதைகளையும் சொல்லலாம்.
தொங்கட்டான் கெழவி எனும் கதையில், இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்த பெண்ணொருத்தி தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காடுகரையில் கூலி வேலைசெய்து அவனை வாத்தியார் வேலைக்கும் படிக்க வைத்து விட்டதாகவும், பிறகு அந்தப் பையன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து கிராமத்தில் நிலபுலன்களை வாங்கி, சொந்தங்களில் பெண் தருவதாக சொல்லியும், தனக்கு தெரிந்த பக்கத்தூரில் வறுமை நிறைந்த குடும்பத்திலிருந்த பெண்ணை பையனுக்கு கட்டி வைத்திருக்கிறாள். இறுதியாக, முப்பது நாளுக்கும் மேலாக இழுத்துக் கொண்டிருந்த கெழவி தன் மகனின் முகத்தை பார்த்ததும் உயிர் பிரிந்ததாக கதையை எளிதாக முடித்திருக்கிறார். வழமையான கதைதானே, இதிலென்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? கதையில் ஒரு நாவலுக்குண்டான விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார். கிராமப்புற இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும், ஒப்பாரி வைக்கத் தெரியாத இளம் பெண்களுக்கு எப்படி ஒப்பாரி என்று வகுப்பெடுப்பதையும், பேருந்து நடத்துனரின் தில்லு முல்லுகளையும் அதற்கு கெழவி செய்த அறிவுக் கூர்மையான செயல்களையும் ;தொகுத்து சொன்னால் ஒரு நாவலே எழுதலாம். அந்த அளவிற்கு விசயங்களை உள்ளடக்கி குறுங்கதையாக்கியிருக்கும் எழுத்தாற்றல்.
அடுத்து செங்காட்டு ஜோசியன் என்னும் கதை, செமத்தியான தீனி. கிராமப் புற மக்கள் இன்னும் ஜாதகம் ஜோசியம் ன்னு திரிந்து கொண்டிருக்கிறார்கள். செங்காட்டில் ஜோசியன் ஒருத்தன் உள்ளது உள்ளபடி அப்படியே சொல்வதகாவும் அதனால் பலரின் அந்தரங்கள் வெளிப்பட்டு மனைவி மார்களிடம் விளக்கு மாறு அடிவாங்குவதாக சொல்கிறார். கல்யாணம் பண்ணி நாலு மாசம் கூட இருந்துவிட்டு வெளிநாடு போன ஒருத்தன் நாலு வருஷம் கழிச்சி வந்து மனைவி குழந்தையோடு வந்து ஜோசியம் பாக்க சென்றிருக்கையில் இது உன் புள்ளையே இல்லை எப்படிப்பா நான் ஜாதகம் பார்ப்பது என்று உண்மையை போட்டு உடைக்க, மிரண்டு போனவன் ஆத்திரத்தில் ஜோசியக்காரனை அடிக்கப் போக, ஜோசியன் மீண்டும் ஆணித்தரமாக சொல்ல, வெளிய எழுந்து வந்து மனைவியை போட்டு மிதிக்க, அவள் வலி தாங்காமல், நாலு மாசம் கூட படுத்துவிட்டு நீ வெளிநாடு போய்டுவே, நாலு வருஷம் நான் சும்மா இருப்பதா ? எங்க நீ இருந்து பாரேன் ன்னு காட்டுக் கத்தலா கத்தியதாக சொல்லியிருக்கிறார். ஒலச்சான் எனும் பாத்திரம் ஜாதகம் நீட்ட, நீ என்னைக்கு உன் கள்ளத்தொடர்பை விடுறியோ அன்னைக்கு நல்லா இருப்பே ன்னு போட்டு உடைக்க அது ஓலச்சானின் பொண்டாட்டி தெரிஞ்சி குடும்பத்தில் சண்டையாகிப் போக கடுப்பில் மறு வாரம் வேறொரு ஜாதகத்தை தூக்கி கொண்டு போயி அவனிடம் இது என் மகள் ஜாதகம் எப்ப கல்யாணம் நடக்கும்னு பாரு என்று சொல்லிருக்கார் ஓலச்சான். செங்காட்டு ஜோசியன் வாங்கிய ஒடனே, இந்த புள்ளையோட அம்மாக்காரி எப்படி எவன் கூடவோ ஓடிப்போயி மூணு மாசம் கழிச்சி திரும்பி வந்து நல்லபடியா குடும்பம் நடத்துறாளோ, அப்படித்தான் இந்தப் புள்ளையும் கல்யாணத்துக்கு முந்தி யார் கூடவோ ஓடிப்போயி ஆறு மாசம் கழிச்சி மீண்டும் வந்து நல்ல படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தும் னு சொல்லிட்டு ஜாதகத்தை மூடி கீழ வைச்ச ஜோசியனை பார்த்து இது எம்மகள் ஜாதகம் இல்ல உன் மகள் ஜாதகம் டா ன்னு சொல்லிட்டு இன்னொரு ஜாதகமும் இருக்கு பாக்குறியா ? ன்னு சொல்லிட்டு ஒரு நூறு ரூபா தாளை எடுத்து அவன் மூஞ்சியில் வீசிவிட்டு வெளிய வருவதாகவும், அதிலிருந்து ஜோசியன் தன் தொழிலை விட்டதாக கதை முடியும். ஒவ்வொரு கதையின் முடிவில் செம சுவையான முடிவு காத்திருக்கிறது.
இதுமாத்திரமில்லாமல் இதிலிருக்கும் கதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவையில் மனதை தைக்க கூடிய விஷயம் அடங்கியிருக்கும். கொடுக்கும் காசிற்கு நிச்சயம் மன நிறைவை அடைவீர்கள்.
பக்கங்கள் : 152
பதிப்பகம் : க்ரியா
வெளியீடு : 2009
விலை : ரூபாய் 125/-
படித்துச் சொன்னது
அரசன்
http://www.karaiseraaalai.com/

Sunday, March 1, 2015
இவ்வளவு நாள் வாசிக்காமல் விட்டுவிட்டோமே என்று என்னை நானே கடிந்து கொண்ட புத்தகம் இந்த மோகமுள். இதை வாசிக்கத் தூண்டிய அண்ணாச்சி மயிலனுக்கு அனேக வணக்கங்கள்.
இசையார்வம்/பாடும் வல்லமை கொண்ட ஒரு வாலிபன் வெளியூரில் தங்கி படிக்கிறான், தன்னைவிட வயதில் மூத்த பெண்ணொருத்தியை ஒருதலையாக காதலிக்கிறான், அந்தக் காதல் கை கூடியதா? இல்லையா? என்ற மையச்சரடை வைத்து 686 பக்கங்களுக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர் தி. ஜானகிராமன். சுருக்கமாக சொல்கையில் பேரரசு படம் போன்று பீதியை கிளப்பினாலும், படிக்கையில் மகேந்திரன் படங்கள் போன்று மனதை தைக்கிறது.
ஒரு நடுத்தர பிராமண/சங்கீத குடும்பத்தின் ஆண்வாரிசான பாபு, கும்பகோணத்தில் தங்கி BA பயின்று வருகிறான். அப்பா வைத்தி, அம்மா, அக்கா பாபநாசத்தில் வசித்து வருகிறார்கள். இவனுக்கென, இவனை புரிந்து கொண்ட ஒரே நண்பனான இராஜம். மராத்திய ராஜ வம்ச வழியான பார்வதிபாய் தஞ்சாவூர் அய்யர் ஒருவருக்கு இரகசிய மனைவியாகவும் அதற்கு சாட்சியாக நாயகி யமுனா எனும் பேரழகி இருப்பதாக சொல்ல துவங்கி கதையை மிக நுட்பமாக செலுத்துகிறார்.
கும்பகோணத்தில் தங்கி படித்துக்கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு வயதான மனிதரின் இளம் மனைவி தங்கம்மாளுடன் ஏற்பட்ட மொட்டை மாடி தனியறை சுகானுபவம், பின்பு பாபு குற்ற உணர்ச்சியில் உழலுதல், அடுத்தடுத்து தங்கம்மாள் வந்து கதவு தட்டுவதையும், யமுனாவிடம் சென்று தனது காதலை தெரிவிக்க, யமுனா மறுப்பு தெரிவிக்க, யமுனாவின் மீது கொண்டுள்ள தனது ஒருதலைக்காதலை ராஜத்திடமும் சொல்ல, இராஜம், பாபுவுக்கு வகுப்பெடுப்பது, பாபுவிற்கு கடிதம் எழுதி வீசிவிட்டு தங்கம்மாள் மகாமக குளத்தில் விழுந்து இறத்தல், அந்த வயதான கணவரின் பின்னணியை அவரின் முதல்தாரத்து மகனை வைத்தே சில பக்கங்களில் விவரிப்பது என்று பட்டாசாக வெடித்திருக்கிறார் ஆசிரியர் தி. ஜா.
பாபு, கும்பகோணத்தில் இருக்கையில் பாட்டுவாத்தியார் ரங்கண்ணா வும், சென்னை வந்த பிறகு பாலூர் இராமு இவர்கள் இருவரைக்கொண்டே சங்கீத சம்பாஷணைகளை தொடர்ந்து நாவலில் பதிந்து கொண்டு வருகிறார். சென்னையின் மாடியறை ஒன்றில் பாபு பாடுவதாகவும், இராமு கேட்பதாகவும் நாவலில் ஓரிடத்தில் வரும், அதை வாசிக்கையில் அனிச்சையாக நமக்கும் அந்த பாடல் ஒலி கேட்பதாக ஒரு உணர்வு தோன்றும். இதுதான் தி.ஜா அவர்களின் பேனாமுனை இரகசியம்.

ஆறொன்று ஓடிக்கொண்டிருக்கையில், கிளையொன்று பிரிந்து வேறெங்கோ ஊர்சுற்றி பின்பு கடலிலோ அல்லது அதற்கு முன்பு பிரிந்த ஆறுடனோ இணைந்து கொள்வது போல, இந்நாவலில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் இருக்கிறது. கிளைக்கதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் தாக்கம் மனதை விட்டு அகலாத அளவிற்கு அழுத்தமாய் இருக்கிறது.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் பாபுவின் பெரியப்பா பிள்ளை சங்கு பற்றிய சிறுகுறிப்பும், அப்புறம் பாபுவின் அக்கா கணவர் இறப்பு, சொத்துக்களை பறித்துக்கொண்டு ஏமாற்றும் கணவன் வழி சொந்தம், அக்காவின் பெண் குழந்தை "பட்டு" இறந்து போவது போன்றவற்றை போகிற போக்கில் சொல்லிவிட்டு போனாலும் மனதில் அப்படியே வேர் விட்டு விழுதிறங்கிவிடுகின்றன அந்த சின்ன சின்ன பாத்திர படைப்புகள்.
முக்கியமாக, ஆணின் உள்ளத்து ஆசைகளையும், அதை பெண்ணொருத்தியிடம் வெளிப்படுத்திய பின்னர் ஏற்படும் சூழலையும் சொன்ன விதம் நறுக். உருவாக்கிய ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் அதன் இயல்பிலேயே முடித்திருப்பது நன்று. கண்ணியம் பிறழாத சொற்களை கொண்டு கிளுகிளுப்பான சம்பவங்களை சொன்னமைக்காகவே இந்த நாவல் தனித்துவமாக மனதில் நின்றுவிடுகிறது.
இந்த நாவலில் நான் பிரமித்த விஷயங்கள் :
அ ) கதைக்குள் கிளைக்கதை, கிளைக்கதைக்குள் கிளைக்கதை என்று நகர்ந்தாலும் தெளிந்த நீரோட்டமாய் இருப்பது வியப்பாக இருக்கிறது.
ஆ) எத்தனை பாத்திரங்களை புகுத்தியிருந்தாலும் தெளிவான கட்டமைப்பினால் எவ்வித குழப்பமுமில்லாமல் இருப்பது.
இ) 30 ஆம் பக்கத்தில் சொல்லப்பட்ட கதாப்பாத்திரம் 600 வது பக்கத்தில் வந்தாலும், வாசிக்கையில் எளிதில் நினைவு கூற கூடிய வசீகரம்.
ஈ) சங்கீத சம்பாஷனைகள் கொண்டு பிண்ணப் பட்டாலும் எங்கும் அயற்சியை தரவில்லை.
உ) பாபு-யமுனா உரையாடல்கள் எதார்த்தமாய் இருக்கிறது கொஞ்சம் கூட நாடகத்தன்மையினறி இருக்கிறது. புத்தகத்தின் ப்ளஸ் இதுதான்.
ஊ) புத்தகம் முழுதும் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்போடு நகர்த்தி செல்வது, இப்படி சொல்ல நிறைய இருக்கிறது, வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்.
ஐந்திணை பதிப்பகம் - 300/-
காலச்சுவடு (கிளாசிக் வரிசை) - 475/-
காலச்சுவடுக்கும், ஐந்திணை பதிப்பகத்தின் புத்தகத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை, (கிளாசிக் வரிசை என்ற கவர்ச்சியை தவிர) ஆகையால் ஐந்திணை தான் என்னோட பரிந்துரை.
நூல் வாங்க:
ஐந்திணை முகவரி:-
No 279, Pycrofts Road Bharathi Street, Triplicane, Chennai - 600005
படித்துச் சொன்னது
அரசன்
http://www.karaiseraaalai.com/
Wednesday, February 25, 2015
பிறக்காத குழந்தைக்கு இவள் எதற்காக கடிதம் எழுத வேண்டும் !!,
அதுவும் நாவல் நீளத்திற்கு பெரிய கடிதம் !!. மேற்கத்தியக் கலாச்சார வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பே இணை சேர்தல் என்பது
மிகச்சாதாரணமாகிவிட்டது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தின் வசத்தால், அசந்தர்ப்பவசமாக அவள் கர்ப்பமாகிறாள்,
அவளது கர்ப்பத்திற்கு காரணமானவன் அவளை கண்டுகொள்ளாமல்,அவளை கவனித்துக்கொள்ளாமல்
அந்த எதிர்பாரா கருவை கலைக்கச் சொல்கிறான், அந்த கரு ஒரு அவசியமற்றது ,
அவமானகரமானது என்று சொல்லி காணாத இடத்திற்கு மறைகிறான்.
அவளது வாழ்வுக்கு பொருள் சேர்க்க அவள் பார்க்கும் வேலைக்கு அந்த கரு
தேவையற்றது எனவும், இப்போது அவளிருக்கும் நிலையில் அந்த கரு தேவையில்லை எனவும்
அலுவலக முதலாளியும் கலைக்கச்சொல்கிறார். கலைக்காமல் காத்து அந்த கருவை குழந்தையாக்கி உலகத்திற்கு தர வேண்டும் ,
“ஏதுமறியா கருவை நான் ஏன் கொலை செய்ய வேண்டும்” என்று அதை குற்றவுணர்வு
சிறிதுமின்றி “ஒரு தாயாக இருக்கறதுங்கறது ஒரு
வியாபாரமில்லை, ஒரு கடமை கூட இல்லை, அது பல உரிமைகள்ள ஒண்ணு...” என தன்
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையாக மாறக் காத்திருக்கும் அந்த கருவுக்கு தத்துவம்
சொல்லியபடி அதை சுமக்க ஆயத்தமாகிறாள்,சுமந்து கொண்டும் திரிகிறாள்.
அந்த கருவின் வளர்ச்சியோடு சேர்ந்தே கதையும் வளர்கிறது.அவள் டாக்டரிடம்
செல்கிறாள், ஸ்கேனிங்க் செய்து கொள்கிறாள், வேலைக்குச் செல்கிறாள் , அவளது மணமாகாத
கனவன் அவளோடு பேசுகிறான், ... கதையில் நிகழ்கிற எல்லாவற்றையும் தனது கருவுக்கு
கடிதமாக சொல்வது மாதிரியே கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு டயரிக்குறிப்பு மாதிரி அவ்வப்போது தனக்கு தோன்றுவதையெல்லாம் தனக்குள்
உருவாகிக்கொண்டிருக்கும் அந்த குழந்தையோடு வார்த்தைகளால் ஊடாடிக்கொண்டே
செல்கிறாள். அந்த கரு ஆணா, பெண்ணா என்று தெரிவதற்கு முன்பே , உலகம் எவ்வளவு மோசமானது
என்றும், பெண்ணாக பிறந்தால் உலகை
எவ்விதமாக எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் பயமுறுத்துகிறாள், அல்லது அது ஆணாகப்
பிறந்தால் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கூறி, பெற்றுக்கொள்வதற்கு முன்பே
அதை வளர்க்க ஆரம்பிக்கிறாள்.
“ஒரு ஆணாக இருக்குறதுங்கறது முன்னால ஒரு வாலோட
இருக்குறது மட்டுமில்லனு உனக்குச் சொல்ல நான் முயற்சி செய்யறேன்,அது நீ ஒரு ‘நபரா’
இருக்கறதுல இருக்கு என்னைப் பொறுத்த அளவுல நீ ஒரு நபரா இருக்கறதுங்கறது எல்லாத்தையும்விட
முக்கியமானது நபர்ங்கறது ஒரு அற்புதமான வார்த்தை, ஏன்னா அதுக்கு ஆண்,பெண் ங்கிற
வரையறை இல்ல, வால் இருக்குறவங்களுக்கும், இல்லாதவங்களுக்கும் அது எல்லையை
வகுக்கிறதில்ல. இதயத்துக்கும், மூளைக்கும் பாலியல் வேறுபாடு கிடையாது,
இதயமும், மூளையும் கொண்ட நபரா நீ இருக்கனும்னா ஆணுன்னும் பொண்ணுன்னும் இருக்கறதால
ஒருத்தர் இப்படியிப்படித்தான் இருக்கனும்னு வற்புறுத்துறவங்கள்ள ஒருத்தனா நிச்சயம்
நீ இருக்கக் கூடாது...“
என்னை நிராகரித்து விட்டுச்சென்றுவிட்டு உன்னைக் கலைக்கச்சொல்லும் உன் அப்பனை
போல அல்லாமல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்கிறாள். உலகத்தின் சாலைகள் எப்படிப்பட்ட கரடுமுரடான கற்களாலும், முற்களாலும் ஆனது, அதை
எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்கிறாள், பயமுறுதலோடு நின்று கொள்ளாமல் எதற்கும்
அஞ்சாமல் தைரியமாக உலகை எதிர்கொள்ள வேண்டும் என தைரியமூட்டுகிறாள். “எனது பேச்சை வேறு யாராவது
கேட்டால், எனக்கு கிறுக்கென்று குற்றஞ்சாட்டுவாங்களா” என உங்களுக்குள் அந்தக் கேள்வி தோன்றுவதற்கு முன்பே
முந்திக்கொள்கிறாள். தத்துவங்கள் சொல்கிறாள், தன் வாழ்வை கதையாக்கி, அந்த கருவுக்கு சில கதைகள்
சொல்கிறாள்.. பேசிக்கொண்டே இருக்கிறாள்.
இந்த புத்தகத்தில் கடைசி சில பக்கங்களில் வாழ்வின் எதார்ததத்தை, கற்பனைக்கும்
நிதர்சனத்திற்குமான வேறுபாட்டை தன் கண்களுக்குத் தெரியும் அந்த குழந்தையிடம் அந்த
தாய் பேசுகிறாள், இந்த உரையாடலை இந்த புத்தகத்தின் இதயம் என்று சொல்வேன் நான்.,
அந்த இதயத்தின் துடிப்புகளை கேட்டவன் என்ற முறையில் சொல்கிறேன், நீங்களும் கூட
அந்த துடிப்புகளை கேட்க முடியும். அவள் அந்த குழந்தையைப் பெற்றுக்கொள்வாளா?
அந்த குழந்தை எப்போது பிறக்கும் ?, அதன் அப்பா அவளோடு சேர்வானா ? , என
வினாக்களின் விரட்டல்கள் கதையோடு சேர்த்து
நம்மை ஓடச் செய்கின்றன.
இந்த படைப்பு ஒரு சமூக நாவலா, தத்துவ விளக்க நாவலா, கடிதமா, திரில்லரா, என
வகைகளுக்குள் . யோசிக்கிற போது இது ஒரு புதுவித படைப்பாக்கம். இந்நாவல் இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஓரியானா ஃபெல்லாசி எழுதிய “Lettera a un bambino mai nato” என்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம். பிற பயமுறுத்தும் வார்த்தைக்கோர்வை மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் போலன்றி , இந்நாவலை திலகவதி பேச்சுத்தமிழ் வழக்கில் மிக அழகாக மொழியாக்கம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கிடைத்துவிட்ட எதிர்பாராத கர்ப்பத்தை சுமந்து திரியும் , பெண்ணிய சிந்தனையுள்ள, வேலைக்குச்செல்லும் ஒரு பெண் தன் கருவோடு புலம்பும் புலம்பல்கள். வலி, வேதனை, ஆழ்மன அலைகளின் ஆழமான பதிவு.
-விஜயன் துரைராஜ்
சில குறிப்புகள்:
இத்தாலிய மூலம் : Lettera a un
bambino mai nato
படைப்பு: Oriana Fallaci (இத்தாலிய எழுத்தாளர்)
இத்தாலிய மூலம்
பதிப்பிக்கப்பட்ட வருடம்: 1975
தமிழ் மொழியாக்கம் : திலகவதி
பதிப்பகம்: அம்ருதா, சென்னை
Wednesday, February 18, 2015
படைப்பாக்கம் : சீனு
அன்புள்ள யூமா.வாசுகி
நலமா? தயவுசெய்து இந்த நலம் விசாரிப்பை மிக மிக மிக எளிதான சம்பிரதாயமான நலம் விசாரிப்பாகக் கருதிவிட வேண்டாம். பொழுது சாய்ந்த கடற்கரையில் அவ்வப்போது நம் கால்களை வருடிச் செல்லும் அலைகளுக்கு மத்தியில் நீங்களும் நானும் நெடுநேரம் கதை பேசிக் கொண்டிருந்தோமே, அப்போது நிகழ்ந்த நட்பின்பால், பாசத்தால் ஆன நலம் விசாரிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
யூமா.வாசுகி என்ற உங்கள் பெயரைக் கேள்விப்பட்டபோது, சுஜாதாவை எப்படி ஒரு பெண்ணாக யூகித்திருந்தேனோ அப்படியே உங்களையும் நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு ஆண்மகனின் படத்தைப் பார்த்ததும் லேசான அதிர்ச்சி. அந்த புகைப்படத்தில் உங்களை எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு ஆணாக.
சென்னையின் வெயில் நிறைந்த ஒரு காலைப் பொழுதில் அரசனின் அறையில் இருந்து கிளம்பும் போதுதான் தற்செயலாக அது நிகழ்ந்தது. நான் தற்செயலை பெரிதும் நம்புபவன். சமயங்களில் தற்செயலினுள் இறைவன் ஒளிந்து கொண்டுள்ளாரோ என்றெல்லாம் கூட யோசிப்பேன். அன்றைக்கு அரசனின் அறைக்கு நான் வண்டியில் சென்றிருக்கவில்லை. அங்கிருந்து மேடவாக்கம் செல்ல எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அந்த நூற்றி இருபது நிமிடங்களையும் வெறுமனே சென்னை மாநகர நெரிசலை வேடிக்கைப் பார்த்தபடி கடப்பதில் உசிதம் இல்லை. அரசனின் அலமாரியில் எதாவாது புத்தகம் சிக்காதா என்று நெடுநேரம் தேடிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை அலசியிருப்பேன், என்னுடைய அப்போதைய மனநிலைக்குத் தகுந்த எந்தவொரு புத்தகத்தையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இங்கு தான் தற்செயல் உள்ளே நுழைகிறது. மஞ்சள் வெயில் என் கையில் சிக்கியது. அதுவரையிலும் பேசாமல் இருந்த அரசனும் கூட 'தலைவரே செம புக்கு, அவசியம் படிங்க' என்றார்.
மறந்தே போனேன். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வாங்கியபோது நான் உடன் இருந்தேன். அவர் கூறிய வார்த்தைகள் நன்றாக நினைவில் இருக்கின்றன 'இந்த புக்கு எப்படியோ என் கைக்கு வந்தது. படிச்சிட்டு குடுத்துட்டேன். இதெல்லாம் பாதுகாக்க வேண்டிய ரகம் தலைவரே' என்றபடி வாங்கினார். அப்போது கூட அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளவில்லை. அல்லது வேறொரு பொழுதில் அவரோ இல்லை யாரேனுமோ என்னிடம் திணித்திருந்தாலும் கூட வாங்கியிருக்க மாட்டேன். காரணம் எனக்கான இவ்வருட வாசிப்புப் பட்டியல் நிரம்பி வழிகிறது. அதில் புதிய புத்தகங்களுக்கு நிச்சயமாய் இடமில்லை. அதனால் என்னளவில் மஞ்சள் வெயில் தற்செயலே. அந்த தற்செயலுக்கு அநேக நமஸ்காரங்கள்.
பேருந்தில் நமக்காக ஒரு இடம் கிடைத்த போதுதான் மெல்ல என் தோள்களில் கைபோட்டபடி கதை சொல்லத் தொடங்கினீர்கள். சில இடங்களில் நீங்கள் கூறுவது கதையா இல்லை கவிதையா என புரியாமல் விழித்தேன். ஒருவேளை கவிதையைத்தான் கதை போல் மாற்றிவிட்டீர்களோ என்ற ஐயம் கூட எழுந்தது. கேட்கலாம் என்றால் நீங்கள் கதை சொல்வதில் மும்மரமாய் இருந்தீர்கள். நானும் கேட்கும் ஆர்வத்தில் எல்லாவற்றையும் மறந்தேன். உங்கள் அருகில் அமர்ந்தபடி உங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியாய் என்னை பாவித்துக் கொண்டேன். பேருந்து நகர நகர கதையும் நகர்ந்தது.
உண்மையைச் சொல்வதென்றால் மஞ்சள் வெயிலின் ஆரம்பப் பக்கங்கள் எனக்கு பிடிக்கவில்லை. மிக முக்கியமாக உங்கள் கதையின் நாயகனான பிரபாகரை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்த சில பிரபாகர்கள் இருக்கிறார்கள். மனதுக்கு மிக நெருக்கமானவர்கள், அவர்களோடு ஒப்பிடும் போது இந்த பிரபா ஒரு கோழை. வாழத்தெரியாதவன். ஒரு பெண்ணிடம் பேசத் தெரியாதவன். தன் காதலை வெளிபடுத்த தைரியமில்லாதவன். எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறவன். அவனிடம் இருக்கும் அந்த அதீத கற்பனை என்னை மூச்சு முட்டச் செய்கிறது. எனக்கே இப்படியென்றால் பிரபாவுக்கு எப்படி இருக்கும். ஆனால் பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். பிரபாவின் வித்து நீங்கள் என்பதால் உங்களை சிலாகித்தால் என்ன பிரபாவைக் கொண்டாடினால் என்ன.
பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். இயல்பில் அவன் ஓவியன் என்றாலும் என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு தேர்ந்த எழுத்தாளன். தனக்கு ஏற்படும் உணர்ச்சிகளை இம்மி பிசகாமல் என்னுள் கடத்தியவன். அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே பிரபா கூறிய கதையை கேட்கத் தொடங்கியிருந்தேன். பிரபாவுக்கு இன்னொன்றும் தெரிந்திருக்கிறது. அது கடிதம் எழுதுவது. அதனால் தானோ என்னவோ ஜீவிதாவின் மீது தான் கொண்ட பெருங்காதலை முழுக்க முழுக்க கடிதமாகவே எழுதிவிட்டான்.
அந்தக் கடிதம் ஜீவிதா கைகளில் கிடைத்ததா இல்லையா என்பது இல்லை என் கவலை. இப்போது பிரபா எப்படி இருக்கிறான். தொடர்ந்து ஓவியம் வரைகிறானா. தன்னை மறந்து போன தன்னுடைய ஜீவிதாவை மறந்துவிட்டு அவளுக்கு எழுதிய கடிதத்தைத் எரித்துவிட்டு வேறு துணையைத் தேடிக் கொண்டானா. இல்லை வழக்கம் போல கடற்கரை மணலில் புகையை ஊதிக் கொண்டு கடலோடு பேசிக்கொண்டு தனிமையில் போதையில் உழல்கிறானா.
சில சமயங்களில் பிரபாகர் மீது பொறாமை வருகிறது. அவன் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் அந்த வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அதி அற்புதமான உவமைகள் ஒவ்வொன்றும் என்னை பொறாமை கொள்ளச் செய்கின்றன. எங்கிருந்து பிடிக்கிறான் இந்த உவமைகளை. சில சமயங்களில் அந்த உவமைகள் குமட்டலை ஏற்படுத்தினாலும் பல தருணங்களில் அந்த அதீத கற்பனையின் புள்ளிகளில் நானும் பிரபாவாகிப் போகிறேன். நான் பிரபாவகிப் போவதால் ஜீவிதாவின் வெறுமையை, அவள் இல்லாததால் ஏற்படும் தனிமையை உணர்கிறேன். இப்பொது பிரபா மீதான கோபம் குறைந்து என்னுடைய வேகம் முழுவதும் ஜீவிதாவை நோக்கிச் செலுத்தப்படுகிறது.
பிரபா ஜீவிதாவுக்கு தொலைபேசச் செல்லும் தருணங்கள் அத்தனையும் ஒரு தேர்ந்த துப்பறிவாளன் கொலையாளியை கண்டுபிடித்தானா இல்லையா என்ற கோணத்திலேயே யோசிக்கச் சொல்கின்றன. என்னையும் அறியாமல் என்னுள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஜீவிதா தைரியசாலி. பிரபாவை எளிதாக எதிர்கொள்வாள். ஆனால் இந்த பிரபா. சுத்தக் கோழை. ஐயோ எப்படியாவது தைரியத்தை வரவழைத்து ஜீவிதாவோடு பேசிவிடுடா என்று நாலு அறை அறைய வேண்டும் போல் இருக்கிறது. அவன் கையில் இருக்கும் தொலைபேசி ரிசிவரைப் பிடுங்கி தலையிலேயே அடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனாலும் எப்போதும் நானும் பிரபாவின் பிரதிநியாகவே இருக்க விரும்புகிறேன். ஜீவிதாவோடு சேர்ந்துகொண்டு பிரபாவை காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ஏனென்றால் பிரபா ஒரு அப்பாவி. சந்தர்ப்பங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளாத் தெரியாமல் எண்ணங்களின் மூலம் பகடையாடப்படுபவன். ஆம் பகடையாடப்படுபவன். என்ன தன்னையே பகடையாக்கிக் கொண்டு முன்னும் பின்னும் உருண்டு கொண்டிருக்கிறான். எல்லாம் ஜீவிதாவுக்காக. கருணையே இல்லாத,வேண்டாம் நான் ஜீவிதாவை திட்டவில்லை. அவளைத் திட்டுவது பிரபாவுக்குப் பிடிக்காது.
நல்லவேளை வாட்ச்மேன் பாலகிருஷ்ணன் பிரபாவுக்கு துணையாக இருக்கிறாரே என்ற ஆறுதல் பெறுத்த நிம்மதி தருகிறது. அவர் அவனோடு இல்லாவிட்டால் நான் இங்கு நிம்மதியாக இருக்க முடியாது. பிரபாவுக்கு உதவி செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறார்கள். டேனியல் மகேந்திரன் சந்திரன் என எல்லாருமே இந்த பிரபாவைத் தவிர. தன்னைப் பற்றி எதையுமே வாட்ச்மேனிடம் பிரபா பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும் கூட பிரபாவுக்காக ஓடி ஓடி உதவுகிறார். அந்த நல்ல மனிதன் எப்படி இருக்கிறார் யூமா. கேட்டதாகச் சொல்லுங்கள். அந்த எஸ்டிடி பூத் பெண், பிரவுசிங் செண்டர் சிறுவன் எல்லாரையும்.
உங்களிடம் நிறைய பேச வேண்டும் யூமா. இல்லை நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும். பிரபாவையும் ஜீவிதாவையும் வாட்ச்மேனையும் மறக்கமுடியாதபடி ஒரு கதை கூறினீர்களே. யாராலும் எழுத முடியாத கதை அது. அதைப் போல வேறொரு கதை நீங்கள் கூறி நான் கேட்க வேண்டும் யூமா. அதுவரைக்கும் மீண்டும் ஒருமுறை பிரபாவின் கடிதத்தைப் படித்துவிட்டு வருகிறேன்.
அன்புடன்
சீனு
புத்தகம் : மஞ்சள் வெயில்
ஆசிரியர் : யூமா.வாசுகி
பதிப்பகம் : அகல்
விலை : 85
பின்குறிப்பு : இந்தப் பதிவை எழுத்து முடித்ததும் யூமா வாசுகி பற்றி தேடியபொழுது தற்செயலாக அண்ணன் கே.ஆர்.பியின் இந்தப் பதிவு சிக்கியது. ஆச்சரியம் அல்லது தற்செயல் அவரும் மடலாகவே இருக்கிறார். அதிலும் அவருடைய பாணியில் அட்டகாசமாக. நம்புங்கள் இதுவும் தற்செயலே.
ஜீவிதா...
Subscribe to:
Posts (Atom)